வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 266ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், மூக்கையா, நவநீதன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்கப் தனபால், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் யோகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள், மாநில எம்எல்எப் மின்வாரிய தொழிற்சங்க பொருளாளர் அனல் செல்வராஜ், மாநர அவைத்தலைவர் தொம்மை, துணைச்செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், தொழிற்சங்க பொறுப்பாளர் காசிராஜன், பொய்யாமொழி மற்றும் பாஸ்கர், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments